B.A Tamil
இலக்கண இலக்கிய நெறிகளோடு புகழ் பூத்த வையப்பமலை முருகன் அருளால் நம் கவிதா’ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ் (B.A., TAMIL) ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் உலகில் நீண்ட காலம் பேசப்பட்டு வரும் அழியாத செம்மொழிகளில் (Classical Languages) ஒன்றாக திகழ்கின்றது. இந்தியாவின் முதல் செம்மொழியாக 2004 இல் அங்கீகரிக்கப்பட்டது. அதன் இலக்கிய வளம் மற்றும் தனித்தன்மை வாய்ந்த செம்மொழியாக திகழ்கின்றது. மானிட வாழ்வை அகம், புறம் எனப் பகுத்து அவற்றுக்கான நெறிகளை இலக்கணமாக வகுத்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.
வீரம் செறிந்த நம் தமிழ் மொழியில் நோக்கம், பல்லாயிரம் ஆண்டுகாலத் தொன்மை, செழுமையான இலக்கிய வளம், பண்பாட்டு அடையாளங்களை உலகெங்கும் பரப்பி நிலை நிறுத்துவதாகும். திருக்குறள் போன்ற நீதி நூல்கள் மூலம் அறநெறிகளை மாணவ – மாணவிகளுக்கு புகட்டுதல், தமிழ் உணர்வை வளர்த்தல் மற்றும் உலகத் தமிழர்களை மொழிவழியே இணைப்பது நோக்கமாகும்.
சங்க இலக்கியம், இலக்கணம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், அற இலக்கியங்கள், நாட்டுப்புறவியல், இக்கால இலக்கியம், திறனாய்வுக் கோட்பாடுகள், ஒப்பிலக்கியம், தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் இலக்கண வரலாறு போன்றவை மாணவர்களுக்கு கற்ப்பிக்கப்படுகின்றன.
2019 – ஆம் ஆண்டு செந்தமிழ் மன்றம் தொடங்கப்பட்டது. இம்மன்றம் மூலம் மாணவர்களின் பேச்சுதிறன், பாட்டு, நடனம், நாட்டுப்புறக்கலைகள், மௌன நாடகம், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல் போன்ற பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்வதும் பண்பாடு சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதிலும், கிராமிய கலையை மீட்டுறுவாக்கம் செய்வது இதன் நோக்கம்.
நேரடி முறை (DIRECT METHOD) தமிழ் மொழியிலேயே தமிழைப் பேச பிழையின்றி பேச வைத்தல், மொழிபயிற்றாய்வுக்கூடம் (Language labaratory) சரியான உச்சரிப்பைக் கற்றுக்கொள்ள உதவும் ஒலி கருவிகள், கணினி மற்றும் (LCD Projector) PPT மூலமாகவும், குறும்படங்கள் மூலமாகவும் கதைகளையும், செய்யுள்களையும் கற்பித்தல், இணையவழிக் கருவிகள் (Digital Resources) முறையில் மின் நூலகம், தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் மின் நூல்கள் அகராதிகள் வழியாகவும், மாணவ – மாணவிகளுக்கு கற்பித்தல் முறையை கற்றுக் கொடுக்கின்றோம்.
பள்ளிகளில் தமிழ் ஆசிரியர், கல்லூரிகளில் விரிவுரையாளர் மற்றும் பேராசிரியராக பணிபுரியலாம். ஊடகம் மற்றும் இதழியல் துறையில் செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர், மொழிபெயர்ப்பு மற்றும் உள்ளடக்க உருவாக்கல் – தமிழ் ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர், அரசுத் துறையில் TNPSC, UPSC போன்ற தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை. வானொலி சேனல்களில் ரேடியோ ஜாக்கி (RJ) ஆகப் பணிபுரியலாம்.